Monday, August 10, 2015


(ஆண் ) 
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ... 
பார்க்கிற பார்வை மறந்துவிடு ... 
பேசுற பேச்சை நிறுத்திவிடு ... 
பெண்ணே என்னை மறந்துவிடு ... 
உயிரே மறந்துவிடு ...
 உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு ... 
என்னை வாழவிடு ... 
 (பெண் ) திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

Wednesday, April 8, 2015


கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்


குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம். 



தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. 

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 16, 2015


என் இனிய முகப்புத்தகம் நண்பர்களுக்கு,
எனக்கு முகப்புத்தகம் வரவே இப்பலாம் பிடிக்கலை ,
அதான் நான் முகப்புத்தகத்திற்கு
இனி வரமாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்


Saturday, February 14, 2015


வாழும் வரை போராடு... 
வழி உண்டு என்றே பாடு,
 இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே, 
மழை என்றும் நம் காட்டிலே, 
 ஒரு காலம் உருவாகும்,
 நிலைமாறும் உண்மையே, 
 வாழும் வரை போராடு...


Friday, February 6, 2015

யாரும் இல்லை என்ற 
கவலை வேண்டாம். 
உனக்காய் அழுவதற்கு 
உன் கண்கள் இருக்கிறது 
துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது. 
இனி யாரும் இல்லை என்ற 
கவலை வேண்டாம். 
உன் தலையினை நீயே வருடிக்கொடு 
உன் தோள்களை நீயே தட்டு 
உன் திறமைகளை நீயே பாராட்டு.. 
உன் தவறுகளை நீயே 
குழிதோண்டிப் புதை 
தோல்விகளை கண்டு அஞ்சாதே 
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே 
முதலில் உன்னை வென்று 
பின் உலகை வெல்ல வா.... 
உடலில் உயிரும் உணர்வில் துணிவும் 
இருக்குவரை போராடு... 
உன் எதிரிகளின் மூக்குகளை 
உன் நம்பிக்கைகளால் உடை 
நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல 
உன் கால்களைக்கொண்டு....!

பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை அல்ல...

பணத்தை என்னி
பிணமாய் வாழ்வதை விட, 
மனிதநேயத்தை மதித்து 
மனிதனாய் வாழ்வோம்,

பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை அல்ல...

Thursday, February 5, 2015

உறவுகள் மாறலாம்

உறவுகள் மாறலாம் 
ஆனால் உன் மேல் வைத்த 
அன்பும், பாசமும் உண்மையானது, 
அது என்றும் மாறாது,
உனக்காக காத்திருக்கும்...