ஆண்:
காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே,
சொல்லாமல் செல்லாதே
இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு,
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...
ஏன்தான் காதல் வளர்த்தேன்,
அதை ஏனோ என்னில் புதைத்தேன்...
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்...
பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்...
இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ...
இதயம் கொண்டு போனால் என்னடி
பெண்:
விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா?
காதல் கதறி இங்கு அழுகிறதே,
இரண்டு கண்ணும் அதில் கருகாதா!
%2Bcopy.jpg)
.png)