Wednesday, February 4, 2015

நடைப்பிணமாய்த் திரிகின்றேன்

நடைப்பிணமாய்த் திரிகின்றேன் 
கடைக்கண்கள் புணர்ந்ததனால் 
விடையறியாக் கேள்வியுடன் 
மடையனாய் அலைகின்றேன்.
மங்கையினை நினைத்து விட்டால் 
சங்கதனை அறுத்து வைப்பாள் 
வஞ்சியின் மேலாசைப் பட்டால் 
 வஞ்சகமாய் மோசம் செய்வாள் 
அம்சமாய் நடித்துக் கொண்டே 
இம்சைகள் தந்து செல்வாள் 
 பாசத்தைப் பகடை ஆக்கி 
துவம்சம் செய்து வைப்பாள்.

No comments:

Post a Comment